சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றமா..?
சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றமா..?
ஒன்றிய அரசின் சார்பில் அஞ்சலக சிறுசேமிப்பு, பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்து வருகிறது.
இதன்படி, ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பழைய வட்டி விகிதமே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.