“விதிமுறையை மாற்றி இவங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குங்க..!” - முதல்வர் கோரிக்கை

“விதிமுறையை மாற்றி இவங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குங்க..!” - முதல்வர் கோரிக்கை

Update: 2021-07-05 16:00 GMT

“மருத்துவர்கள் அனைவருக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது;

“இந்த ஆண்டு பாரத ரத்னா விருது ஒரு இந்திய மருத்துவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று நாடு விரும்புகிறது. இதன் மூலம் நான் எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் குறிக்கவில்லை.

கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். லட்சக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி கவலைப்படாமல் தன்னலமின்றி மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

அவர்களை கவுரவிக்கவும், நன்றி சொல்லவும் இதைவிட சிறந்த வழி என்ன..? இதுதான் தங்களின் குடும்பத்தினரையும், உயிரையும் கருதாமல் மக்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக அமையும்.

தனிநபர் அல்லாமல் மொத்தமாக பாரத ரத்னா விருது அளிக்க விதிமுறை அனுமதிக்காவிட்டால், விதிமுறையை மாற்ற வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடையும்” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Tags:    

Similar News