பட்டய கிளப்பும் விஷால், ஆர்யாவின் ‘எனிமி’ பட டீசர்..!
பட்டய கிளப்பும் விஷால், ஆர்யாவின் ‘எனிமி’ பட டீசர்..!
விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் ‘எனிமி’ படத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தை தொடர்ந்து, விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் ‘எனிமி’. அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தில் மிருணாளினி ரவி மற்றும் மம்தா மோகன்தாஸ் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தன. இந்ந்லையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலை கிளப்பியது.இந்த வரிசையில் படத்தின் முதல் பார்வை டீசர் இன்று மாலை 6 மணிக்கு சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.