மருத்துவமனையிலேயே டார்க் ரூமில் சல்லாபம்... அரசு மருத்துவரின் காம லீலை !
மருத்துவமனையிலேயே டார்க் ரூமில் சல்லாபம்... அரசு மருத்துவரின் காம லீலை !
கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுபவர்கள் மருத்துவர்கள். ஆனால், இங்கு ஒரு மருத்துவரே மருத்துவமனையின் ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி டார்க் ரூம் ஒன்றை அமைத்து உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியை பிரபல புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவராக பணியாற்றி வருபவர் ஸ்டெபனோ ஜோனத்தன். இவரது மனைவியும் மருத்துவராக உள்ளார். ஸ்டெபனோ ஜோனத்தன் தான் பணிபுரியும் இடத்தில் உள்ள நர்ஸிடம் நெருக்கமாக பழகி மனைவியுடன் சிக்கியுள்ளார். அதனை தொடர்ந்து கணவரின் செல்போனை ஆராய்ந்ததில் வேறு சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சிக்கியுள்ளன.
இந்த விவகாரத்தை தெரிந்துகொண்டத்தில் இருந்து மனைவியையம் அவர் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். ஸ்டெபனோ ஜோனத்தன் குறி வைக்கும் பெண்கள் பெரும்பாலும் நைட் டியூட்டியில் இருக்கும் செவிலியர்கள், கணவன் இல்லாமல் தனியாக இருக்கும் பெண்கள் தான் என அதில் கூறப்படுகிறது.
அதுபோல, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரிடன் பழகியுள்ளார். தனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி ஜோனத்தன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரத்தையும் அறிந்த மருத்துவரின் மனைவி, அந்த ஆசிரியையிடம் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை மறைத்துதான் உறவில் இருந்தார் கூறியதை கேட்டு இருவருமே அதிர்ந்தனர்.
அப்படி ஜோனத்தன் இதுவரை பத்து பெண்களுடன் உடலுறவு கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னிடம் கூறியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். மருத்துவரின் காம வலையில் சிக்கும் செவிலியர்களை மருத்துவமனையில் மாடியில் உள்ள டார்க் ரூமுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணமாகாத பெண்களாக இருந்தால், அவர்களின் பிறந்தநாளுக்கு பைக் வரையில் பரிசாக கொடுக்கும் மருத்துவர் ஜோனத்தன், திருமணத்துக்கு முன்பே ஜாலியாக இருக்க வேண்டும் என கூறி ஆசையை துண்டுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மருத்துவரின் மனைவி மற்றொரு திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார். அதாவது, என் கணவர் மட்டுமல்ல அவரது நண்பர்களும் மோசமானவர்கள் என்று கூறுகிறார். ஒரு பிறந்தநாள் விழாவின்போது என்னை சந்திக்க வந்த பெண் மருத்துவர் ஒருவர், ஒரு பையனை காண்பித்து அவனுடன் உறவு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என கூறியுள்ளார். கணவனின் தொல்லை வரம்பு மீறி சென்றதால்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், உயர் அதிகாரிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதால் நான்கு முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மருத்துவரின் மனைவி வேதனை தெரிவிக்கிறார்.
newstm.in