தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை!!
தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை!!
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்தவாரம், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல், சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள, தங்கமணியின் நண்பர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோட்டில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடைபெறுகிறது. அதன்படி, ஈரோடு சாந்தங்காடு பகுதியிலுள்ள தங்கமணி உறவினர் குமார் என்பவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பெரிபட்டியில் உள்ள அவரது நண்பர் மோகன் வீடு, ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள நட்சத்திர அப்பார்ட்மெண்ட் மற்றும் மோகனூர் சாலையில் உள்ள ஈஷா அப்பார்ட்மெண்ட்; குமாரபாளையத்தில் தங்கமணியின் நண்பர் மூர்த்தி வீடு, கொல்லிமலையில் உள்ள PST தங்கும் விடுதி, பரமத்தி வேலூர் பொத்தனூர் சண்முகம் வீடு உள்ளிட்ட இடங்களில் ஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in