விஜய்க்கு மீண்டும் சோதனை!! வருமான வரித்துறை அதிரடி
மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரலில் வெளியாகிறது. படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புது சிக்கலாக மாஸ்டர் திரைப்படத்தின் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். மாஸ்டர் படத்தின் வியாபாரம் குறித்து லலித் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக பிகில் பட வசூல் தொடர்பாக விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி அலோரம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடைபெற்றது. இதனால் திரையுலகமே பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இந்நிலையில் விஜய் படத்திற்கு தொடர்புடையவர்களிடம் மீண்டும் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in