செங்கல்பட்டில் அதிர்ச்சி.. மகள்களுடன் கிணற்றில் சடலமாக மிதந்த ஆட்டோ டிரைவர்..!

செங்கல்பட்டில் அதிர்ச்சி.. மகள்களுடன் கிணற்றில் சடலமாக மிதந்த ஆட்டோ டிரைவர்..!

Update: 2022-01-20 04:35 GMT

சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல் (44). இவரது மனைவி ஜெயந்தி (38). இந்தத் தம்பதிக்கு ஐஸ்வர்யா (5), பூஜா (3) என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி ஆட்டோவில் சென்ற தனது கணவர் ஞானவேல் மற்றும் இரண்டு குழந்தைகளை காணவில்லை என, அவரது மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலையத்தில் நேற்று (18ம் தேதி) புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் கடம்பூர் எனும் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றின்  அருகே ஆட்டோ ஒன்று அநாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, விவசாய கிணற்றில் இறந்த நிலையில் 2 சிறுமிகளுடன் ஒரு நபர் மிதப்பதைக் கண்டனர். இதையடுத்து 3 பேரின் உடல்களையும் மீட்டு மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அது எழும்பூரில் காணாமல்போன ஞானவேல் மற்றும் அவருடைய மகள்களான ஐஸ்வர்யா, பூஜா என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News