சிக்கன் கிரேவியா? கரப்பான் பூச்சி கிரேவியா?.. தட்டிக்கேட்டவரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்!!
சிக்கன் கிரேவியா? கரப்பான் பூச்சி கிரேவியா?.. தட்டிக்கேட்டவரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்!!
சிக்கன் கிரேவியில் சிக்கனுக்கு மாறாக கரப்பான் பூச்சி இருந்ததாக சுட்டிக் காட்டிய வழக்கறிஞரை ஓட்டல் உரிமையாளர் தாக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்டாலின். இவர் வழக்கு ஒன்றிற்காக ஸ்ரீரங்கத்தில் உள்ள நீதிமன்றம் சென்றுவிட்டு நண்பர்களுடன் சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் உணவருந்த சென்றார்.
அங்கு சாப்பிட்டபோது பரோட்டா மற்றும் சிக்கன் கிரேவியில் கரப்பான் பூச்சி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை ஸ்டாலின், ஓட்டல் உரிமையாளரிடம் சுட்டிக்காட்ட முயன்றபோது அவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், அதிகமாக பில் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் ஸ்டாலின் இதுகுறித்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ராவிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
newstm.in