இன்று சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி!!

இன்று சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி!!

Update: 2021-12-19 06:00 GMT

ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று தேரோட்டமும், நாளை ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டதுஇந்நிலையில் சிதம்பரத்தில் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

அதன்பலனாக ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக  சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களுடன் தேரோட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News