அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை!

அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை!

Update: 2021-03-26 16:18 GMT

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற ர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவி வருகிறது.இத்துடன்  சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும்  தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 
இந்த  ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்தும்,  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் குறித்தும் ஆலோசனைகள்  மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

Tags:    

Similar News