இனி வார இறுதி ஊரடங்கு ரத்து- முதலமைச்சர் திடீர் அறிவிப்பு
இனி வார இறுதி ஊரடங்கு ரத்து- முதலமைச்சர் திடீர் அறிவிப்பு
இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா என 6 மாநிலங்களில் தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறையே வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடகா மாநிலமும் உண்டு. கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னரும் வார இறுதி நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் பசவராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இதுவரை அமலில் இருந்த வாராந்திர ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்தது.
தற்போது அமலில் இருக்கும் இரவு நேர ஊரடங்கு அதாவது, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு வழக்கம்போல் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் பெங்களூரு நகரில் மட்டும் வரும் 29ஆம் தேதி வரை பள்ளிக்கூடங்கள் மூடியிருக்கும். ஆனால், மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இதனால் தொற்று பாதிப்பு அதிகரித்தப்போதும் கட்டுப்பாடுகளை தளர்த்தி தளர்வுகளை அளிக்க கர்நாடகா மாநில அரசு அதிரடியாக முனைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in