பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!!

பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!!

Update: 2021-12-27 06:45 GMT

பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறன் கொண்ட மாணிக்க விநாயகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'தில்' திரைப்படத்தில் 'கண்ணுக்குள்ள கெளுத்தி' பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர்.

800க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தனுஷின் 'திருடா திருடி' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துன்பமானாலும், துள்ளலானாலும், தனது குரல் வளத்தால் அவ்வுணர்வுகளை துள்ளியமாகக் கடத்தி விருந்தளித்தவர்.

பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்தவர் வழுவூர் மாணிக்க விநாயகம் என்று தெரிவித்துள்ளார்.


newstm.in

Similar News