திருவெற்றியூரில் கதறியழுத முதல்வர் எடப்பாடி!
திருவெற்றியூரில் கதறியழுத முதல்வர் எடப்பாடி!
என் தாயை பற்றியே இழிவாக பேசும் திமுக நாளை ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலை என்னவாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் போதே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பொதுமக்களிடம் பேசினார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஆ.ராசா முதல்வரை விமர்சித்து பேசியிருந்தார். நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின், கள்ள உறவில் பிறந்த குறை பிரசவ குழந்தை பழனிசாமி.
நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார் என்று பேசியிருந்தார்.
இந்நிலையைில் திருவொற்றியூரில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, இன்று ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், உங்களுக்கெல்லாம் யார் பாதுகாப்பு கொடுப்பது. ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களின், தாய்மார்களின் நிலை என்னவாகும் என்று சிந்தித்து பாருங்கள் என்று கூறினார்.
தாய்மார்களை கொச்சைப்படுத்தி, இழிவுப்படுத்தி பேசியவர்களுக்கு தக்க தண்டனையை நீங்கள் வழங்க வேண்டும் என்று அவர் மக்களை பார்த்து கேட்டுக் கொண்டார்.
தன் தாயை இழிவாக பேசியவர்களுக்கு இறைவன் தண்டனை கொடுப்பான் என்று கூறிய முதல்வர் இப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி அராஜகம் செய்வார்கள், பெண்களை எப்படி இழிவு படுத்துவார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார்.
newstm.in