முதலமைச்சருக்கு கஞ்சா பழக்கம் உள்ளது.. எம்எல்ஏ குற்றச்சாட்டால் பரபரப்பு !!
முதலமைச்சருக்கு கஞ்சா பழக்கம் உள்ளது.. எம்எல்ஏ குற்றச்சாட்டால் பரபரப்பு !!
இந்தியாவில் மது விலக்கு அமலில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக பீகார் உள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருப்பதால், மாநிலத்தின் வருவாய் வெகுவாக பாதித்துள்ளதாக ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் எதிர்கட்சி எம்எல்ஏ.க்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
எனினும், மதுவிலக்கு சட்டத்தை அனைவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டு வருகிறார். மது விலக்கு காரணமாக கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை சட்டவிரோத போதைப்பொருட்களில் புழக்கம் அதிகரித்து வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ ராஜ்வன்ஷி மஹ்தோ பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர் கூறுகையில், மாநிலத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு தடை உள்ளது. ஆனால், முதல்வர் நிதிஷ்குமார் கஞ்சா புகைக்கிறார். அவர் மட்டும் கஞ்சா புகைக்கும் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவில்லை? பீகாரில் மதுவிலக்கு சட்டம் இருப்பது மக்களுக்கு தெரியும். ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் சட்டவிரோத மதுபான சப்ளை தாராளமாக கிடைக்கிறது.
நிதிஷ் குமார் பீகார் மக்களை முட்டாளாக்கி வருகிறார். பீகாரில் மதுபானம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் ‘மது அருந்தக் கூடாது’ என்று ஏன் உறுதிமொழி ஏற்கச் சொல்கிறார்? காரணம், அவரே அதனை பின்பற்றவில்லை. பீகாரில் உள்ள ஏழைகளை மதுபான மாஃபியாக்கள் சுரண்டி வாழ்கின்றனர். ஆனால், ஏழைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை உண்மையான மதுபான மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
newstm.in