தோனியின் சிஎஸ்கே அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா.. ரசிகர்கள் உற்சாகம் !

தோனியின் சிஎஸ்கே அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா.. ரசிகர்கள் உற்சாகம் !

Update: 2021-11-16 16:44 GMT

வரும் 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தலைமையிலான அணியினருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

2021 ஆம் ஆண்ட நடந்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

அதேநேரத்தில், தோனி 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதால், அவரால் சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு உடனடியாக இந்தியா வரவில்லை.  இந்தச் சூழலில், உலகக்கோப்பை முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையைத் தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார் எனவும், அந்த விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தற்போது, சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார். வருகிற 20ஆம் தேதி (சனிக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, உலகக்கோப்பை போட்டிகள் முடிந்து தோனி இந்தியா திரும்பியுள்ளதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா வரும் நவம்பர் 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை அளித்தார்.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு முதலமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடக்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

newstm.in

Tags:    

Similar News