இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் விளையாடினார்.அதில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை பிரவீன்குமார் பதிவு செய்தார். கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் பிரவீன்குமார் இழந்தார்.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். எதிர்காலத்தில் பிரவீன்குமார் மேலும் பல வெற்றிகளை குவிக்க மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது எனவும் கூறியுள்ளார்.
பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The success journey of India at #Tokyo2020 #Paralympics continues with setting and breaking records.
— M.K.Stalin (@mkstalin) September 3, 2021
I extend my felicitations to Praveen Kumar for winning #Silver in #HighJump with a new Asian record. Wishing success in all his future endeavours. #Praise4Para pic.twitter.com/Qvj39tfZZy