மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

Update: 2021-12-18 20:45 GMT

மேல்மருவத்தூர் பங்காரு அடிகாளாரை முதல்வர் மு..ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில்இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சாலை விபத்தினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்‌ 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். அதுவே இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்.

இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முதல்வர், அங்குள்ள ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் நலம் விசாரித்தார்அப்போது, ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன் கோ..அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்அதோடு, ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்துக்கான அவசர சிகிச்சைப் பிரிவினையும் திறந்து வைத்தார்.

newstm.in

Similar News