‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

Update: 2021-12-19 05:35 GMT

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க ‘இன்னுயிர் காப்போம்’ என்ற புதிய மருத்துவ உதவி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதே  ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம்  ஆகும். தமிழ்நாடு முழுவதும் 610 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மருத்துவமனைகளில்  சிகிச்சை அளித்து சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும்.

Similar News