சேலத்தை குறிவைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சேலத்தை குறிவைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 261 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் 261 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே இடத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும், 12 அரசு துறைகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 38.52 கோடி மதிப்பிலான 83 திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 54 கோடி ரூபாய் மதிப்பிலான 60 பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
மாவட்டத்தில் ரிங் ரோடு அமைப்பது, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, ஐடி பூங்கா செயல்பாடுகள், பனமரத்துப்பட்டி ஏரி சீரமைப்பு உள்ளிட்ட பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புள்ள திட்டங்கள் குறித்தும் சேலத்திற்கு புதிய திட்டங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
newstm.in