சைக்கிளிங் சென்ற போது தவறு செய்த முதல்வர் ஸ்டாலின்..! என்ன தெரியுமா..?

சைக்கிளிங் சென்ற போது தவறு செய்த முதல்வர் ஸ்டாலின்..! என்ன தெரியுமா..?;

Update: 2021-07-08 22:13 GMT

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பு, அவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடற்பயிற்சி செய்வார்.

அந்த சமயங்களில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்து பொதுமக்களுடன் பேசுவதையும், செல்ஃபி எடுப்பதையும் அவர் வாடிக்கையாக கொண்டிருப்பார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபலிபுரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவருடன் பாதுகாப்பாக மற்றவர்களும் சைக்கிளில் பயணித்தனர், எப்போதும் தன் உடல்நலனில் அதிக அக்கறை கொண்ட அவர், முதல்வராக பொறுப்பேற்று முதல்முறையாக சைக்கிளில் பயணித்தார்.

அவரை பார்த்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் ஸ்டாலின்.

ஆனால் அன்றைய தினம் அவர் முகக்கவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருடன் சென்றவர்கள் எவரும் முக கவசம் அணியாமல் சைக்கிள் ஓட்டி வந்தனர்.

Tags:    

Similar News