இன்று தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடக்கி வைக்கிறார்..!!
இன்று தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடக்கி வைக்கிறார்..!!
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
“இன்று முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்க்ளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடக்கி வைக்கிறார். ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது.
2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகடிவ் என வந்து விடுகிறது. தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3-ம் அலையாக பரவுகிறது.” என்று கூறினார்.