தாயுடன் உறங்கிய குழந்தை கடத்தல்.. ரூ.2.80 லட்சத்திற்கு விற்பனை செய்த கும்பல்!!

தாயுடன் உறங்கிய குழந்தை கடத்தல்.. ரூ.2.80 லட்சத்திற்கு விற்பனை செய்த கும்பல்!!

Update: 2020-03-01 12:56 GMT

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை 24 மணிநேரத்தில் போலீசார் மீட்டனர்.  
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பாட்ஷா (27) - சினேகா (22) தம்பதிக்கு ராஜேஸ்வரி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. சினேகா தனது குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை பெசன்ட் நகர் வந்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பலூன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தினார்.

நேற்று முன்தினம் மாலை பலூன் வியாபாரம் முடிந்து பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம் அருகே படுத்து உறங்கியுள்ளனர். ஆனால் மறுநாள் காலை எழுந்தப்போது சினேகா அருகே படுத்திருந்த அவரது 8 மாத பெண் குழந்தை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் குழந்தையை ஒரு பெண் தூக்கி செல்வதும், மற்றொரு கேமராவில் 3 பெண்கள், ஒரு ஆண் ஆட்டோவில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் நெசப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த அந்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். குழந்தையைக் கடத்திய காரைக்குடியைச் சேர்ந்த மேரி (35) அவரது மகன் ரூபன் ( 19) சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிக்கும் திருப்பதி அம்மாள் (42) அவரது மகள் பாலவெங்கம்மாள் (18) என்பது தெரியவந்தது. குழந்தையை வாங்குவதற்காக வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டம் மரமடக்கியைச் சோ்ந்த மணிகண்டனையும் கைது செய்தனா்.

மணிகண்டனிடம் அக்கும்பல் ரூ.2.80 லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்தது அம்பலமானது. இந்த வழக்குக்காக பெசன்ட்நகா் தொடங்கி கே.கே.நகா் வரை 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடித்ததாகவும், கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.1.15 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.  

newstm.in

Tags:    

Similar News