பயணத்தின்போது மனைவிக்கு பிரசவ வலி.. காரை ‘ஆட்டோ பைலட்’ மோடில் மாற்றி பிரசவம் பார்த்த கணவர்..!

பயணத்தின்போது மனைவிக்கு பிரசவ வலி.. காரை ‘ஆட்டோ பைலட்’ மோடில் மாற்றி பிரசவம் பார்த்த கணவர்..!

Update: 2021-12-21 12:42 GMT

டெஸ்லா காரில் பயணித்தபோது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் காரை ஆட்டோ பைலட் முறைக்கு மாற்றி, மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்த சம்பவம் பென்சில்வேனியாவில் நிகழ்ந்துள்ளது.

டெஸ்லா நிறுவனம்  உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின்  கார்கள் அனைத்தும் உலககெங்கும் புகழ்பெற்றவை. பல லட்சம் மற்றும் கோடிகள் மதிப்புள்ள டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.


அதில், ஆட்டோ பைலட் (தன்னியக்க பைலட்) முறையானது மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதன்மூலம், காரை ஓட்டுநர் இயக்காமல் தானாகவே இயங்கும். ஆனாலும், ஓட்டுநர் இருக்கையில் யாராவது அமர்ந்திருக்கும் போது மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்துமாறு டெஸ்லா நிறுவனம் பரிந்துரைக்கிறது.

டெஸ்லா நிறுவனத்தின் இந்த அம்சம் ஏற்கனவே  பல ஓட்டுநர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது ​​டெஸ்லா நிறுவனத்தின் கார் ஒரு பெண் தனது குழந்தையைப் பெற்றெடுக்க உதவியுள்ளது.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த தம்பதி கீட்டிங் ஷெர்ரி - யிரான் ஷெர்ரி. இவர்களுக்கு 3 வயது மகன் உள்ள நிலையில், யிரான் ஷெர்ரி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் குடும்பத்துடன் தங்கள் டெஸ்லா காரில் பயணித்துள்ளனர். அப்போது யிரான் ஷெர்ரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனே, கணவர் கீட்டிங் ஷெர்ரி காரில் மருத்துவமனை நோக்கி  வேகமாக சென்றார். அப்போது அவர்களது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனை செல்ல தாமதம் எற்பட்டது. இதனால் கணவர்  கீட்டிங் ஷெர்ரி காரை ஆட்டோ பைலட் முறைக்கு மாற்றி தனது மனைவியின் பிரசவத்திற்கு உதவியுள்ளார். பின்னர், டெஸ்லா காரில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இது குறித்து கீட்டிங் ஷெர்ரி கூறும்போது, “டெஸ்லா காரின்  தன்னியக்க பைலட்டின் அற்புதமான வடிவமைப்பிற்கு டெஸ்லா நிறுவன பொறியாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

Similar News