எல்லையில் கெத்து காட்டிய இந்திய ராணுவம்! 20 சீன வீரர்கள் படுகாயம்!
எல்லையில் கெத்து காட்டிய இந்திய ராணுவம்! 20 சீன வீரர்கள் படுகாயம்!
சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிக்கப்டுள்ளதாகவும், இந்த விவாகரத்தில் 20 சீன வீரர்கள் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லையில் நுழைந்தது. அதே போல, ஜூன் மாதமும் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லையில் நுழைந்து மோதலில் ஈடுபட்டது.
இந்நிலையில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய லடாக் பகுதி முழுவதிலும் சுமார் 50 ஆயிரம் வீரர்களை இந்தியா குவித்துள்ளது. இதே போல, எல்லைப்பகுதியில் சீனாவும் தனது வீரர்களை குவித்து வருகிறது. இதனால் லடாக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இதுவரை 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்னரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் சிக்கிம் எல்லையில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாகு லா பாஸியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்,சீன தரப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இந்திய வீரர்கள் சீன வீரர்களை அடித்து விரட்டி உள்ளனர். இதில் சீன வீரர்கள் 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.