3 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது NOMADLAND திரைப்படம்!!

3 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது NOMADLAND திரைப்படம்!!

Update: 2021-04-26 13:26 GMT

கொரோனா பரவல் காரணமாக ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இரண்டு இடங்களில் நடைபெற்றது. தொகுப்பாளர் இன்றி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய 2 இடங்களில் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. 

இதில், சிறந்த இயக்குநர் விருது நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றுள்ளார்.ஆஸ்கர் விருது பெறும் இரண்டாவது பெண் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பிரான்சஸ் மெக்டோர்மெண்ட் பெற்றார்.அமெரிக்காவை சேர்ந்த பிரான்சஸ் மெக்டோர்மெண்ட் 3வது முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதையும்  நோமேன்லேண்ட் திரைப்படம் பெற்றது.

Tags:    

Similar News