2021 ஐ.பி.எல் ஏலத்தில் வரலாறு படைத்த கிறிஸ் மோரிஸ்..!
2021 ஐ.பி.எல் ஏலத்தில் வரலாறு படைத்த கிறிஸ் மோரிஸ்..!
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் தென் ஆப்ரிக்கா அணி வீரர் கிறிஸ் மோரிஸ். கடும் போட்டிக்கு இடையே ரூ. 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை சொந்தமாக்கியுள்ளது.
இந்தியாவின் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகளவில் கவனம் பெற்றதாகும். இந்தாண்டுக்கான 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. தற்போது வீரர்களை மினி ஏலம் விடும் நிகழ்வு சென்னையில் நடக்கிறது. இதற்கான இறுதிப்பட்டியலில் 292 வீரர்கள் பெயர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, இன்று நடந்த ஏலத்தில் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரரான கிறிஸ் மோரீஸ் ரூ. 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஏலம் தொடங்கும் போது இவருடைய அடிப்படை விலை ரூ. 75 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் மோரீஸ், இனி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுவார்.
THE MOST EXPENSIVE PLAYER IN #IPL HISTORY IS NOW A ROYAL!!!
— Rajasthan Royals (@rajasthanroyals) February 18, 2021
WELCOME, CHRIS MORRIS! 🥳#HallaBol | #IPLAuction | #IPL2021 | @Tipo_Morris
வீரர் கிறிஸ் மோரீஸை சொந்தமாக்கும் முயற்சியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 16 கோடி வரை ஏலம் கேட்டது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 16.25 கோடிக்கு ஏலம் கேட்கவும், பஞ்சாப் அணி பின்வாங்கிவிட்டது. இதற்கு முன்னதாக இந்திய வீரர் யுவராஜ் சிங்கை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 16 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன்மூலம், இதுவரை நடந்த ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்கிற பெருமையை மோரீஸ் பெற்றுள்ளார்.