பாஜகவுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரம் செய்யும் சர்ச் நிர்வாகம்!

பாஜகவுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரம் செய்யும் சர்ச் நிர்வாகம்!

Update: 2021-03-06 09:03 GMT

கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை காப்பாற்றியதால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு அந்த சர்ச் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆலப்புழா மாவட்டம் செபாட் பகுதியில் 1050ஆம் ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தடோக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தேவாலயத்தை இடிக்க நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது.

ஆனால் அதற்கு தேவாலய நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேவாலயத்தை இடிக்கும் உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்று சர்ச் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.பாலசங்கர், பிரச்னையில் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார். மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர்  தேவாலயத்தைப் பார்வையிட்டு, ஆயிரம் ஆண்டு கால பழமையானது என்பதால் தேசிய நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சான்றிதழ் அளித்தனர். இதனால் தேவாலயத்தை இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது.

தேவாலயத்தைக் காப்பாற்றிய பாலசங்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் செங்கனூர் தொகுதியில் போட்டி யிடுகிறார். எனவே, அவருக்கு கிறிஸ்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சர்ச் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News