16 ஆயிரம் ரூபாய்க்கு துணி... கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக கூறி டிமிக்கி கொடுத்த பட்டதாரி பெண்!

16 ஆயிரம் ரூபாய்க்கு துணி... கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக கூறி டிமிக்கி கொடுத்த பட்டதாரி பெண்!

Update: 2021-11-28 06:05 GMT

புதுச்சேரி காந்தி நகர் வழுதாவூர் சாலையில் தணிகாசலம் என்பவர் நடத்தி வரும் துணிக்கடையில் ரூ. 8 ஆயிரத்திற்கு துணி வாங்கிய அந்த பெண், கூகுள் பே மூலம் பணத்தை செலுத்துவது போல நடித்து கடைக்காரரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதே போல திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள துணிக்கடையிலும் ரூ. 8 ஆயிரத்திற்கு துணி வாங்கிவிட்டு பணத்தை அனுப்பாமல் கடைக்காரரை ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக துணிக்கடைகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான அனுசியா என்ற அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News