இரவுநேர ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு- முதலமைச்சர் புதிய அறிவிப்பு !!

இரவுநேர ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு- முதலமைச்சர் புதிய அறிவிப்பு !!

Update: 2022-01-30 06:02 GMT

31ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது

இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து அதிகளவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் மாநிலமாக கர்நாடகா உள்ளது. இதையடுத்து, கொரோனாதொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இதுவரை அமலில் இருந்த வாராந்திர ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் பசவராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், கர்நாடகாவில் இரவுநேர ஊரடங்கு வரும் 31ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். மேலும், 31ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார். கர்நாடகாவில் வார இறுதிநாட்கள் ஊரடங்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

Tags:    

Similar News