உடற்பயிற்சி கூடத்தில் முதலமைச்சர் தீவிர ஒர்க் அவுட் – வைரல் வீடியோ!!

உடற்பயிற்சி கூடத்தில் முதலமைச்சர் தீவிர ஒர்க் அவுட் – வைரல் வீடியோ!!

Update: 2021-12-27 07:15 GMT

தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது

அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்ட முதலமைச்சர், இந்த பயணத்தின்போது மக்களையும் சந்தித்து அவர்களையும் உற்சாகப்படுத்துகிறார்.

தொடர்ந்து தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு, மக்களையும் அவ்வாறு செய்யும்படி தூண்டுகிறார்சமீபத்தில் தொல்காப்பியர் பூங்காவில் வாக்கிங் சென்ற முதல்வர், பின்னர் அதுதொடர்பான படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.


அந்த பதிவில், நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல்நலத்தைப் பேணுவதிலும் செலுத்தவேண்டும்.சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும். உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்  என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், முதல்வரின் புதிய உடற்பயிற்சி வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

Similar News