ரத்தத்தை உறையை வைக்கும் குளிர்.. ராணுவ வீரர்கள் வீர நடனம்.. வைரல் வீடியோ !

ரத்தத்தை உறையை வைக்கும் குளிர்.. ராணுவ வீரர்கள் வீர நடனம்.. வைரல் வீடியோ !

Update: 2022-01-09 10:16 GMT

இந்திய எல்லையில் நாட்டை பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் பல்வேறு சவால்கள் எதிர்கொள்வம். வெப்பம், மழை, குளிர் என அனைத்தையும் எதிர்கொண்டு போராடி நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது எல்லை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

இந்த கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அயராது பணியாற்றி வருகின்றனர் ராணுவ வீரர்கள். இமயமலையில் நிலவும் குளிரை சமாளிக்க உடல் வலிமை மட்டுமல்லாது, மன வலிமையும் மிக அவசிமாகிறது. இத்தகைய சூழலில் உடற்பயிற்சி, நடனம் ஆகியவை ராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. 

அந்த வகையில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் ரத்தத்தை உறைய வைக்கும் குளிர் நிலையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்கள், தங்கள் கலைப்பை போக்கும் வகையில் பாரம்பரிய ‘குக்ரி’ நடனத்தை ஆடினர். இந்த நடனம் வீரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கூர்கா மக்களின் ஆயுதமான சிறிய வகை கத்தியை கைகளில் ஏந்தியபடி ராணுவ வீரர்கள் ஆடிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  
 
newstm.in

Tags:    

Similar News