"பாய்ஃப்ரண்ட் இல்லாமல் கல்லூரிக்கு வராதீங்க" மாணவிகளை அதிர்ச்சி அடைய வைத்த கல்லூரி நிர்வாகம் !
"பாய்ஃப்ரண்ட் இல்லாமல் கல்லூரிக்கு வராதீங்க" மாணவிகளை அதிர்ச்சி அடைய வைத்த கல்லூரி நிர்வாகம் !
ஆக்ராவில் உள்ள பிரபல கல்லூரி ஒன்று மாணவிகள் பாய்ஃப்ரண்ட் இல்லாமல் கல்லூரிக்கு வரவேண்டாம் என அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவின் பிரபல கல்லூரிகளில் முதன்மையானது செயின்ட் ஜான்ஸ் கல்லூரி. இந்த கல்லூரியின் பெயரில், பேராசியர் ஆசிஷ் ஷர்மா என்பவர் கையெழுத்திடப்பட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், வரும் வரும் பிப்ரவரி மாதம் 14-க்குள் ஒவ்வொரு மாணவியும் ஒரு பாய்ஃப்ரண்ட் வைத்துக் கொள்ளவேண்டும். இது மாணவிகளின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு.
எனவே, தனியாக வரும் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை. இதனால், மாணவிகள் தங்கள் பாய்ஃப்ரண்ட் உடன் அண்மையில் எடுத்த போட்டோவை காண்பிக்கவேண்டும். அப்போது தான் கல்லூரிக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தகவல் கல்லூரி மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கல்லூரி மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி பிரின்ஸ்பல் எஸ்.பி.சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் பற்றி செயின்ட் ஜான்ஸ் கல்லூரி பிரின்ஸ்பல் சிங் தெரிவிக்கையில், செயின்ட் ஜான்ஸ் கல்லூரி நிர்வாகத்தின் பெயரை சீர்குலைக்கும் வகையில் சிலர் இது போன்ற சதிவேலையில் ஈடுபட்டு தவறான செய்தியை பரப்பி வருக்கின்றனர்.
எங்கள் கல்லூரியில் ஆசிஷ் சர்மா என்ற பெயரில் பேராசிரியர் யாரும் பணிபுரியவில்லை. எனவே மாணவிகள் அந்த நோட்டீஸை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.