கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

Update: 2021-12-18 19:25 GMT

சென்னையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இளைஞர்களிடையே தற்கொலை மனப்பான்மை அதிகம் உள்ளது. இது மிகவும் மோசமான நிலை. தற்கொலை எண்ணம் வந்தால் அதற்கு ஏற்ப ஆலோசனை பெற்று தெளிவு பெறலாம். அந்த வகையில் தான் சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலையூர் அடுத்த ராஜகீழ்பாக்கம், அவ்வையார் தெருவைச் சேர்ந்த கிருத்திகா (20) என்ற இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் உறவினர்கள் வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கியவாறு இருந்தவரை மீட்டனர். தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Similar News