காதலனை தாக்கி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. பெரும் கொடூரச் செயல் !!
காதலனை தாக்கி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. பெரும் கொடூரச் செயல் !!
கர்நாடாக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 20 வயது மாணவியும் அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவரும் காதலித்து வருகின்றனர். தற்போது கல்லூரி அடைக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது தனியாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். அந்தவகையில் இருவரும் மாலையில் லலிதா திரிபுரா பகுதிக்கு சென்று காரை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது காதலர்களை அங்கு வந்த 6 பேர் கும்பல் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்து காதலர்கள் தப்பிக்க முயன்றப்போதும் அக்கும்பல் சுற்றிவளைத்தது. மேலும், கல்லூரி மாணவியின் காதலனை பிடித்து சரமாரியாக தாக்கி அவரை கட்டிப்போட்டு விட்டு கல்லூரி மாணவியை தூக்கிச்சென்றனர். அங்கிருந்த புதருக்குள் தூக்கி சென்று கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். கல்லூரி மாணவியிடமும், அவரது காதலனிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
பின்னர் கல்லூரி மாணவியை அவரது காதலன் மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மாணவியை மருத்துவர் பரிசோதனை செய்த போது அவர் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளானது தெரிந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் இருவரிடமும் சம்பவம் குறித்து விசாரித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in