இந்தியாவிலும் வந்தாச்சு.. பெற்றோர் சம்மதத்துடன் இரு ஆண்கள் திருமணம்..!

இந்தியாவிலும் வந்தாச்சு.. பெற்றோர் சம்மதத்துடன் இரு ஆண்கள் திருமணம்..!

Update: 2021-12-21 06:15 GMT

இந்தியாவில் இதுவரை ஓரினச்சேர்க்கை திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஹைதராபாத் புறநகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அபய் டாங்கே (34) மற்றும் சுப்ரியோ சக்ரவர்த்தி (31) ஆகிய இரு ஆண்களும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த இந்த திருமண விழாவில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் 60 பேர் மற்றும்  நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தினர்.

சுப்ரியோவும் அபயும் தங்களின் எட்டு ஆண்டு கால நட்புக்கு பிறகு இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். பஞ்சாப்பை  சேர்ந்த அபய், இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர். சுப்ரியோ  மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் . இதனால், இவர்களது திருமணம் மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபி பாரம்பரியத்துடன் நடைபெற்றது.

திருமண கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன, இதில் எல்ஜிபிடீ (LGBT) சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். சுப்ரியோவின்  பெற்றோர் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பின்னர் அவர்களது உறவை ஏற்றுக் கொண்டனர்.

Similar News