மீண்டும் போஸ்டர் ஒட்டி காமெடி.. விஜய் முதலமைச்சர், தோனி பிரதமர் !

மீண்டும் போஸ்டர் ஒட்டி காமெடி.. விஜய் முதலமைச்சர், தோனி பிரதமர் !

Update: 2021-08-13 08:29 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் நேற்று திடீரென நேரில் சந்தித்தனர். இது தொடர்பான  புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலானது. நடிகர் விஜய் தற்போது "பீஸ்ட்" என்ற படத்தில் நடித்து வருகிறார். 

பீஸ்ட் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகே, ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. அந்த விளம்பர படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடித்துள்ளார். இரண்டு படப்பிடிப்புகளும் அருகருகே நடைபெற்றதால், பீஸ்ட் படத்தின் தளத்திற்கு தோனி வந்து நடிகர் விஜயை சந்தித்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், தோனி - விஜய் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திற்குள் மதுரை வடக்கு மாவட்ட மாநகர் இளைஞரணி ரசிகர்கள் ஒட்டியுள்ள அதிரடி போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், தோனி - விஜய் அருகருகே இருக்கும் படத்தை வைத்து, தோனி படத்தின் அருகே "PM" என்றும், விஜய் படத்தின் அருகே "CM" என்றும், "ஆளப்போகும் மன்னர்கள்" எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.

 

விஜயை அரசியலுக்கு இழுக்கும் நோக்கில் மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அதனைத், தொடர்ந்து இப்போது தோனியுடன் இணைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரும் வைரலாக துவங்கியுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் கேலிக்கும் ஆளாகியுள்ளது. விஜய் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வெட்டிவேலையில் ஈடுபடுவதாக சமூகவலைதளங்களில் கூறுகின்றனர். மேலும் அரசியலுக்கு வருவதுக்கு முன்பே இதுபோன்று பிரதமர், முதலமைச்சர் என போஸ்டர் ஒட்டுவது சிரிப்பை ஏற்படுத்துவதாகவும் பரவுகிறது.

newstm.in

Tags:    

Similar News