தளபதி 65 ஸ்டண்ட் காட்சிகள், கே.ஜி.எஃப் படத்தை விஞ்சும் அளவுக்கு எடுக்க முடிவு !!

தளபதி 65 ஸ்டண்ட் காட்சிகள், கே.ஜி.எஃப் படத்தை விஞ்சும் அளவுக்கு எடுக்க முடிவு !!

Update: 2021-02-24 16:21 GMT

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்திற்கான ஸ்டென்ட் காட்சிகள், கே.ஜி.எஃப் படத்தை விஞ்சும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமான வகையில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதை கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மேலும், இதற்கான சண்டை காட்சிகள் அமைக்கும் பொறுப்பை அன்பறிவு சகோதர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அன்பறிவு சகோதரர்கள், தளபதி 65 படத்திற்காக தாங்கள் செய்து வரும் ஏற்பாடுகளை குறித்து மனம் திறந்தனர். முன்னதாக இவர்கள் கே.ஜி.எஃப் படத்தில் பணியாற்றி இருந்தனர். அதை விஞ்சும் வகையில் விஜய் படத்திற்கான சண்டை காட்சிகள் அமையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

அந்த வகையில் நெல்சன் திலீப்குமார் தனது திரைபாணியில் இருந்து மாறியுள்ளது தெரிய வருகிறது. கோலமாவு கோகிலா, மான்ஸ்டர் என இரண்டு படங்களையும் நகைச்சுவையுடன் அவர் வழங்கி இருந்தார். இந்த அம்சத்தில் இருந்து மாறி முற்றிலும் நடிகர் விஜய்க்குரிய பாணியில் தளபதி 65 படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் திலீப்.

இந்த படத்தில் ‘அலா வைக்குந்தபுரம்லோ’ படத்தில் நடித்து பிரபலமடைந்த, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. மேலும், தளபதி 65 படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 


 

Tags:    

Similar News