நட்சத்திர காவலர் விருது.. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு வழங்கினார் கமிஷனர்..!
நட்சத்திர காவலர் விருது.. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு வழங்கினார் கமிஷனர்..!
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு, நவம்பர் மாதத்தின் நட்சத்திர காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை போலீசில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரியும் போலீசாருக்கு, 5,000 ரூபாயுடன் மாதத்தின் நட்சத்திர காவலர் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லையில், கல்லறையில் உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு நவம்பர் மாதத்திற்கான நட்சத்திர காவலர் விருது வழங்கப்படுகிறது.
அவருக்கு, இந்த விருதுடன் 5,000 ரூபாய் வெகுமதி வழங்கி பாராட்டி, சான்றிதழ் வழங்கிய கமிஷனர் சங்கர் ஜிவால், இன்று பிறந்த நாள் கொண்டாடும் 21 போலீசாருக்கும் வாழ்த்து அட்டைகள் வழங்கினார்.