பொங்கல் தொகுப்பு குறித்து புகார்.. முதல்வர் நாளை ஆலோசனை..!
பொங்கல் தொகுப்பு குறித்து புகார்.. முதல்வர் நாளை ஆலோசனை..!
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 95 சதவிகித மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு குறித்து சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் எதுவும் நடந்திருப்பின், இது தொடர்பாக கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.