புதிய ஸ்டூடியோவில் இளையராஜா! குவியும் வாழ்த்துக்கள் !!

புதிய ஸ்டூடியோவில் இளையராஜா! குவியும் வாழ்த்துக்கள் !!

Update: 2021-02-03 13:47 GMT

சென்னை கோடம்பாக்கத்தில் புதிதாக ஒரு இடம் வாங்கி ஸ்டூடியோ கட்டும் பணிகளை அண்மையில் தொடங்கிய இளையராஜா, அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று புதிய ஸ்டூடியோவை திறந்து தனது இசைப்பயணத்தை மீண்டும் மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இசையமைத்து வந்தார். ஆனால், அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்க உள்ளதாகவும், எனவே, இளையராஜாவை காலி செய்ய பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் சொன்னது. 

இதனால், ஆவேசம் அடைந்த இளையராஜா, இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இந்த வழக்கில் இருதரப்பும் சமரசம் செய்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது. இருப்பினும் இரு தரப்பினரும் மோதல் அப்படியே தொடர்கிறது. 

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் புதிதாக ஒரு இடத்தை வாங்கிய இளையராஜா, அங்கு புதிய ஸ்டூடியோ கட்டும் பணிகளை தொடங்கினார். பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், இன்று புதிய ஸ்டூடியோவை  திறந்து இசைப் பணிகளை தொடங்கினார். அப்போது, விஜய் சேதுபதி வெற்றிமாறன் ஆகியோர் இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவுக்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் பணியை இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் இன்று மகிழ்ச்சியுடன் தொடங்கினார். இதனையடுத்து, இளையராஜாவுக்கு இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News