ரஜினிகாந்த் முடிவால் உற்சாகத்தில் 'மாநாடு' படக்குழுவினர் !!

ரஜினிகாந்த் முடிவால் உற்சாகத்தில் 'மாநாடு' படக்குழுவினர் !!

Update: 2021-11-27 17:16 GMT

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. படப்பிடிப்பு தொடங்கியது முதல் பல போராட்டங்களை சந்தித்தது இப்படம். ஒருவழியாக அனைத்தையும் முறியடித்து நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியானது. 

படம் வெளியானது முதல் பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்தது. மாநாடு படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதேவேளையில், நடிகர் சிம்புவுக்கு இது தரமான கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர். 


இந்நிலையில் மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநாடு படம் பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படக்குழுவுக்கு தலைவர் (ரஜினிகாந்த்) வாழ்த்து தெரிவித்தார், என்று பதிவிட்டுள்ளார்.

அதேபாேல் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவையும் தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். இன்று எனது நடிப்பு திறமைக்காக எனக்கு விருது கிடைத்தது போல் உணர்கிறேன். ரஜினிகாந்த் என்னை அழைத்து ஜயா என்னை வாழ்த்தினார், என எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


newstm.in

Tags:    

Similar News