சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாநாடு படக்குழு..!!
சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாநாடு படக்குழு..!!
சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’.அரசியல் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் திரையரங்கு கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டதால் நாளை நவ.25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் சிம்புவை பெரிய திரையில் பார்க்க ஆவலோடு இருந்தனர்.
இந்நிலையில் மாநாடு படத்தின் ரிலீசை தள்ளி வைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
— sureshkamatchi (@sureshkamatchi) November 24, 2021
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்

இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன் தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்".
இந்த பதிவால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.