குவியும் வாழ்த்து.. 38 வயதில் காதலரை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை !

குவியும் வாழ்த்து.. 38 வயதில் காதலரை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை !

Update: 2021-11-20 09:11 GMT

நடிகை சந்திரா மலையாளம் மற்றும் தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ், மலையாள சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இதனால் இரு மாநிலங்களிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் டிவியில் 2007 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் சந்திரா.இந்த சீரியலில் பிரஜின் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியலின் டைட்டில் சாங் பல இளைஞர்களுக்கு இன்றும் ஃபேவரெட் என்று கூறலாம்.

மேலும் 2014 - 2015-ம் ஆண்டு சன் டிவி-யில் ஒளிபரப்பான, ’பாசமலர்’ சீரியலில் சந்திரா நடித்தார்.தற்போது மலையாளத்தில் ’ஸ்வந்தம் சுஜாதா’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை சுஜாதாவிடம் நெட்டிசன்கள் அடிக்கடி எப்போது திருமணம் என்று சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர், அதற்கு விரைவில் திருமணம் நடைபெறும் என சந்திரா சமீபத்தில் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட நாள் காதலித்து வந்த டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார் சந்திரா.இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிக்கு சீரியல் பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News