மாநாடு பட டீசர் வெளியீடு - சிம்புவுக்கு குவியும் வாழ்த்து..!

மாநாடு பட டீசர் வெளியீடு - சிம்புவுக்கு குவியும் வாழ்த்து..!

Update: 2021-02-03 21:19 GMT

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்கிற பெயரில் நடித்துள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். ஷூட்டிங் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மாநாடு திரைப்படம் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். அதனால் ஒவ்வொரு மொழியிலும், அந்த திரைத்துறைக்கு ஏற்ற முக்கிய பிரபலம் படத்தின் டீசரை வெளியிடுகிறார்.தமிழில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அதேபோல, தெலுங்கு டீசரை ரவி தேஜாவும், கன்னட டீசரை நடிகர் சுதீப்பும், மலையாள டீசரை நடிகர் ப்ரித்விராஜூம், இந்தி டீசரை இயக்குநர் அனுராக் கஷ்யப்பும் வெளியிட்டுள்ளனர்.

Full View

எப்போதும் சிம்பு படங்களில் பஞ்ச் வசனங்கள், அதிரடி காட்சிகள் நிறைந்திருக்கும். ஆனால் மாநாடு பட டீசர் அதற்கு நேராக பரபரப்பான காட்சிகள் மற்றும் எந்தவித பஞ்ச வசனமில்லாமல் வெளியாகியுள்ளது. சிம்புக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வரும் ரசிகர்கள், சமூகவலைதளங்கள் அனைத்திலும்  மாநாடு டீசரை வைரல் செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News