பெரியளவில் திட்டம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு !

பெரியளவில் திட்டம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு !

Update: 2021-07-13 17:58 GMT

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் வர இருக்கின்றன.  இந்த நிலையில், அண்மையில் சரத் பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கடந்த வாரத்தில் சந்தித்து பேசினார்.  

எனவே தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என கருதப்படுகிறது. அதேநேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்குவாரா அந்த அணியிலே சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி போன்றவை இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா போன்றவை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த சந்திப்பில் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார். அத்துடன் பிரியங்கா காந்தி இந்த வாரம் லக்னோ செல்ல இருக்கிறார். அங்கே உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தொடங்க இருக்கிறார். எனவே முக்கியமான முடிவுகளுக்கு இந்த சந்திப்பு ஒரு தொடக்க புள்ளியாக இருக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

newstm.in

 

Tags:    

Similar News