ராமர் கோவிலுக்கு நன்கொடை வசூலிக்கும் காங்கிரஸ் மாணவர்கள் !

ராமர் கோவிலுக்கு நன்கொடை வசூலிக்கும் காங்கிரஸ் மாணவர்கள் !

Update: 2021-02-03 17:40 GMT

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் குழு மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் இணைந்து நிதி திரட்டி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதே மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ரூ.11 கோடி என பல்வேறு பிரபலங்கள் நன்கொடையை வாரி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் குழு மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். 

மேலும், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சுமார் 15 நாட்களுக்கு தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள பள்ளிகள் கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழங்களுக்கு சென்று ராமர் கோவில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட நன்கொடையை பிரச்சாரத்தின் முடிவில் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என  ராஜஸ்தான் மாநில இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News