மூன்று மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள் !!

மூன்று மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள் !!

Update: 2021-06-18 08:15 GMT

கொரோனா பேரிடரால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் வடமாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.04 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.  இது 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. மேலும், மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் சாண்டெல் பகுதியில் இன்று அதிகாலை 1.06 மணிக்கு 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் வடமாநில மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

 
newstm.in

Tags:    

Similar News