தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க பரிசீலனையா..? ஒன்றிய அரசு பதில் இது தான் ?

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க பரிசீலனையா..? ஒன்றிய அரசு பதில் இது தான் ?

Update: 2021-08-04 04:25 GMT

கொங்கு நாடு குறித்து தமிழ்நாடு பாஜகவில்  சிலர் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து தமிழ்நாடு இரண்டாக பிரிக்கும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இருப்பதாக செய்திகள் பரவின.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் எஸ்.ராமலிங்கம், பாரிவேந்தர் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர்  நித்தியானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போதும் ஏதும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் எந்த கோரிக்கையும் வரவில்லை; எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என கூறி உள்ளார்.

Tags:    

Similar News