ஆறுதல் செய்தி.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது- இன்றைய முழு நிலவரம் !

ஆறுதல் செய்தி.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது- இன்றைய முழு நிலவரம் !

Update: 2022-01-24 20:30 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் நேற்று 30,580 என உறுதியாகியிருந்த கொரோனா பாதிப்பு, இன்று 30,215 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில் இன்று 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 31,64,205. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,98,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29,20,457 ஆக உள்ளது.

தொற்று பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும்கூட, உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,264 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 2 லட்சத்து 6 ஆயிரத்து 484 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னையில் 6296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

newstm.in


 

Similar News