கட்டப் பஞ்சாயத்து குறைய வாய்ப்பு.. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் தலைமையில் சிறப்பு படை..!
கட்டப் பஞ்சாயத்து குறைய வாய்ப்பு.. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் தலைமையில் சிறப்பு படை..!
தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து ஆங்காங்கே காணப்படுகின்றன. இவை கிராமங்கள் மட்டுமின்றி பெருநகரங்களிலும் காணப்படுகின்றன. பல இடங்களில் சினிமா பாணியில் கட்டப் பஞ்சாயத்துகள் இன்றளவும் நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது.
தலைநகர் சென்னையில் அதிக அளவு கட்டப்பஞ்சாயத்து நிகழ்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து தடுக்க சிறப்பு படை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
தொழிற்சாலைப் பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழிலதிபர்களிடம் பண மோசடி சம்பவம் குறைய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.